கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா இயக்க தலைவராக இருந்த பாட்ஷா உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பாட்ஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தனக்கு பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு இன்று முதல் 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்புடன் ...
கோவை மாவட்ட தொழிற்சாலைகளின் துணை தலைமை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் டி.எம்.பொன்னுசாமி இவரது மனைவி கொடி நிலை.இந்த நிலையில் பொன்னுசாமி கடந்த 1 – 1 – 1995 முதல் 31 -7. 2001 வரையிலான காலகட்டத்தில் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 20 லட்சத்து 71 ஆயிரத்து 696 ரூபாயை வருமானத்துக்கு ...
கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈரோடு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.18 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதல் இடமும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடமும் பெற்றனர்.வளையப்பந்துப் போட்டியில் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி ...
திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி விஜயலட்சுமி வயது 42. இவர் பூண்டியை அடுத்த வெள்ளாத்து கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் போது பின்னால் ஹெல்மெட் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் விஜயலட்சுமியை மடக்கி ...
சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், கணபதி நகர், ஜீவா நகர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு எதிர்புறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். இதற்கிடையே வீட்டு ...
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 5,000 கன அடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு கர்நாடக மாநிலம், மாண்டியா விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி ஆதரவில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ. புட்டண்ணா தலைமையில் விவசாயிகள் ...
எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று ...
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலையில் தொழில் நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் மின் உற்பத்தி புதன்கிழமை தொடங்கியது. கூடங்குளத்தில் ரஷியா தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. 5 ...
வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 32 வீடுகள், கடைகள் காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ...
அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு வந்துள்ள தெலங்கானா அதிகாரிகள் குழுவினர் கேட்டறிந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. திருக்குவனையில் திட்டத்தை ...













