நடுத்தெருவில் நின்ற குடும்பத்தை வாழவைத்த போலீஸ் கமிஷனர் சங்கர் பொதுமக்கள் பாராட்டு…

ஆவடி போலீஸ் கமிஷன் ஷங்கர் வாரந்தோறும் புதன்கிழமை பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறை கேட்பது வாடிக்கை நேற்று புதன்கிழமை யாதலால் மக்கள் குறை கேட்பு முகாமில் ஆண்களும் பெண்களும் திருவிழா கூட்டம் போல் திரண்டனர் 23 வது வாரம் நடைபெறும் இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இணை கமிஷனர் டாக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மக்கள் குறைகளை கேட்டு அறிந்தனர் முதல்வரின் முகவரியிலிருந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தீர்வு காணப்படாத 50 மனுக்கள் மற்றும் நிலுவையில் இருந்த 80 மனுக்கள் உரிய அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 37 புதிய மனுக்கள் உரிய அதிகாரிகள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது முகாமில் கமிஷனரை சந்திக்க வந்த பொதுமக்கள் நடுத்தெருவில் நின்ற எங்களை ஆதரித்து எங்களை ஏமாற்றி யவர்கள் கடும் நடவடிக்கை எடுத்து எங்களை வாழ வைத்த தெய்வமே கமிஷனர் சங்கர் குடும்பமே வாழ வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டினர்