கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது..! கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று சங்கனூர் ரோடு, அண்ணா நகர் ஆட்டோ ஸ்டாண்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் ...
கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரது உரையில், திருக்குறளை போல் நெறிப்படுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை. சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி முக்கியமானது. 450 அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முக்கியம். இதுவரை 109 ...
லடாக்: லடாக்கின் கார்கில் மாவட்டம் ட்ராஸ் நகரில் பழைய உடைந்த பொருட்கள் தளத்தில் மர்மமான முறையில் பயங்ரமாக வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரை அடுத்து உள்ள லடாக்கின் டராஸிலு பழைய பொருட்களை ஸ்கிராப் செய்யும் இடம் ஒன்று ...
முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து பொதுக் கூட்டங்களில் பேசக்கூடாது எனவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியை விட ‘இந்தியா’ கூட்டணியில் திமுக இருப்பது பெரிய காமெடி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைப்பயணம் ...
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 265 ஓட்டல்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள பர்கர் கிங் ஓட்டலில் கெவின் போர்டு (54) என்பவர் ...
சந்திரயான்-3, ஆக.23-ஆம் தேதி நிச்சயமாக நிலவில் இறங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இயக்குநா் நீலேஷ் எம்.தேசாய் தெரிவித்தாா். டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியிலுள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகமதாபாதில் உள்ள ...
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார். லடாக் பயணத்தின் போது அவர் பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களவை, மாநிலங்களவை, திட்டக் கமிஷன் மற்றும் பாதுகாப்பு படைகள் உட்பட பல அமைப்புகளை இந்தியா உருவாக்கியது. அதில் தற்போது ஆர்எஸ்எஸ் தனது அமைப்பை சேர்ந்தவர்களை உட்புகுத்த முயற்சி செய்கிறது என்று கூறினார். மேலும் அவர் ...
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது தொகுதி பொதுமக்களிடம் மரக்கன்றுகளை கொடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான ...
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22 முதல் 24 வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து இருதரப்புப் பயணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி கிரீஸுக்குச் செல்கிறார். 40 ஆண்டுகளில் ...
இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்.பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு. இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி ...