கோவை ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 27)இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இது குறித்து அந்த சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ...
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர் மாவட்ட செயலாளர்கள் வைரமணி தியாகராஜன் மேயர் மு அன்பழகன் எம் எல் ஏக்கள் பழனியாண்டி ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை ...
கோவை தெற்கு உக்கடம், ரோஸ் கார்டனை சேர்ந்தவர்இர்ஷாத் . இவரது மனைவி ஷிபா (வயது 28) இர்ஷாத் சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். கோவையில் வீடு கட்டுவதற்காக தனது மனைவியிடம் 30 பவுன் நகை பெற்றோரிடம் வாங்கி வருமாறு கூறினார். அதற்கு ஷிபா மறுத்தார் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .இவர் திடீரென்று மாயமானார் . இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கடத்தியதாக இடிகரை, தேர் வீதியைச் சேர்ந்த முருகேஷ் ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி காலனியில் அருள்மிகு . பொன் மாரியம்மன் கோவில் உள்ளது .சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் சாமியின் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி பிரவீன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சபரீஷ் குமார் (வயது 32 ) இவர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ள தென்னிலயத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு முன்பு தனது பைக் நிறுத்தி இருந்தார். அதை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் . இதுகுறித்து சபரீஷ் குமார் பொள்ளாச்சி கிழக்கு ...
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கரை ,குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ...
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றதும் பல அதிரடி மாற்றங்களை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வேண்டி குவிந்து வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று ...
நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளை வருடம் தோறும் வரவேற்கும் விதமாக தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருடம் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடப்பில் உள்ளதால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி மற்றும் சிம் பூங்கா, குன்னூரில் பழக்காட்சி ...
கோவை வடவள்ளி,ஐஓபி காலனி காமாட்சி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57) பாரதியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பல்கலைக்கழக வளாகத்தில் பணியில் இருந்த போது இவரை அங்கு வந்த காட்டுயானை தாக்கியது.இதில் படுகாயம்அடைந்தார் . சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசில் ...













