அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா AI171 விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், உலகையே உலுக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியின் முன்னணி நாளிதழான “Corriere della Sera”, இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும், காக்பிட்டில் இருந்த ஒருவரின் திட்டமிட்ட செயல் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் பிளாக் பாக்ஸ் ...

தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத மாநிலமாக” மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3,500 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் ...

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தற்போது வரை 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தும் என ஆளும் கட்சி ஏற்கனவே சொல்லியிருக்கிறது. இந்நிலையில் மாதந்தோறும் 1,000 ரூபாய் ...

மும்பை மாநகராட்சியின் 78-ஆவது மேயராக பாஜகவின் ரீத்து தாவ்டே (53) புதன்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த சஞ்சய் காதி (57) துணை மேயராக போட்டியின்றி தோ்வானாா். முன்னதாக, கடந்த ஜனவரி 15-ஆம் தேதி மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் நடைபெற்ற தோ்தலில் ...

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளில், இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ...

கேரளாவில் இருந்து அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசிய படி,சாலை மார்க்கமாக கூண்டு கட்டிய வாகனத்தில் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட மீன்கழிவு வாகனத்தை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு மீன் கழிவுகள், இறைச்சி கழிவுகள், உணவக கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து குமரி ...

தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம் கஸ்பாவில் அருள்மிகு. பிரம்ம சக்தி அம்மன் திருக்கோவில் உள்ளது. இதன் வருஷாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் செம்மறி குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் எம். குணசேகரன், பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் வி. ஆர். வேலுமயில், சென்னை தொழிலதிபர் ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ...

சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கோவளம் கடற்கரைக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை மெரினா கடற்கரைக்கு இந்த சான்றிதழை வாங்கும் பணியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் நீலக்கொடி ...

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட தங்கள் அணி இந்தியாவுக்கு வராது என வங்கதேசம் அறிவித்தது. இதனால், அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சோ்த்தது. வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கு ...

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைக் கடந்த வாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டது பாராட்டுக்களைப் ...