தெருநாய்கள் வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரேபிஸ் நோய் தாக்கிய தெருநாய்களையும், ஆக்ரோஷமான தெருநாய்களையும் கருணைக்கொலை செய்ய அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.

தெருநாய்கள் இடமாற்றம் செய்வது குறித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு,தெருநாய்கள் குறித்தான இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்தது. பொது இடங்களில் தெருநாய்கள் இருப்பது கவலைக்குரியது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில், “மனித உயிருக்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் ஏற்படும் அச்சுறுத்தலைத் திறம்படக் கையாள்வதற்காக, குணப்படுத்தவே முடியாத நோயான ரேபிஸ் அல்லது வெளிப்படையாக ஆபத்தான/ஆக்ரோஷமான நாய்கள் தொடர்பான வழக்குகளில் விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் (ABC Rules) மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ நெறிமுறைகளுக்கு இணங்க, கருணைக்கொலை உட்பட சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதமக்களை, அதிலும் குறிப்பாக குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவங்களை புறக்கணிக்க இயலாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளார். குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்ட தனது முந்தைய உத்தரவுகளை திரும்ப பெற நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற தவறியதற்காக மாநில அரசுகளையும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது. மருத்து வமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றி, அதற்கு பதிலாக அவற்றை காப்பகங்களுக்கு அடைக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.

அந்த நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு, அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், நாய்களுக்கு உணவளிப்பதற்கான பிரத்யேக இடங்களை தவிர, பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதுகுறித்து கரூர் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜோதிமணி அவரது X பக்கத்தில், “உண்மையிலேயே தெருநாய் பிரச்சினையை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இருந்து தெருநாய்களைக் கையாளும் பொறுப்பை விடுவிக்க வேண்டும்” என அறிவுரை கூறி உள்ளார்.

மேலும் அவர், “தினந்தோறும் தெருநாய்களை கையாள்வதற்குரிய நிதியோ, பணியாளர்களோ , நிபுணத்துவமோ, கருணையோ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. இதற்கென்று மாநில,மாவட்ட அளவில் தனி நிதி ஒதுக்கீடும், நிபுணத்துவம் கொண்ட தனி அமைப்பும் தேவை” என கோரிக்கை வைத்துள்ளார்.

இத்துடன் தன்னார்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் இப்பிரச்சினையை திறம்படக் கையாள முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தங்குமிடங்களை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தெருநாய்களுக்கு ஊசி போடுவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, உணவளிப்பது, நகர்/ ஊர்ப்புறங்களுக்கு வெளியே தங்குமிடங்களை உருவாக்குவது (நிலம் ஒதுக்கீடு செய்வது அரசுக்கு ஒன்றும் சிரமமான விசயம் இல்லை) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், இப்பிரச்சினையை முழுவதுமாகத் தீர்க்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புற நிர்வாகத் துறையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தன்வசம் வைத்திருப்பதால் இதுகுறித்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மேலும் அவர், “அரசு இதை ஒரு முன்னோடித் திட்டமாக ( Pilot Project) ஏதேனும் ஒரு மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம். கரூர் மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம் என்கிற யோசனையையும் முன்வைக்கிறேன்.

இதற்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் தயாராக உள்ளேன். மக்களை தினந்தோறும் பாதிக்கின்ற ஒரு பிரச்சினை குறித்து பேசிக்கொண்டே இருப்பதை விட தீர்வை நோக்கி நகர்வது அவசியம்.

உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் மாநில அரசுகள் உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இப்பணியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இப்பிரச்சினையை முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியும்” என தீர்வையும் முன்மொழிந்துள்ளார்.

கூடவே கூடாது. தெருநாய்களுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர பொதுஇடங்களில் உணவளிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பூங்காக்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் இருந்து நாய்களை மீட்டு, காப்பகங்களில் அடைக்க வேண்டும். அவற்றுக்கு கருத்தடை செய்தாலும் மீண்டும் அதே இடங்களில் மட்டும் விடக்கூடாது.

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தான, மிகவும் ஆக்ரோஷமான தெருநாய்களை மட்டும் சட்டப்படி கருணைக் கொலை செயய் அனுமதித்துள்ளது.