கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளை சேர்ந்த 811 கவுன்சிலர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கின்றனர். நகர்ப்புற தேர்தல் தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 811 ...

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து ...

சென்னை: கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக 2020 மார்ச் 24 முதல் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் வழக்கு விசாரணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. பின்னர் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வானதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை நடந்தது. ...

கீவ்: பலம் வாய்ந்த ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் குண்டுகளை அந்நாட்டு மக்கள் தயாரித்து வருகின்றனர். 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் மக்கள் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து ஏராளமான குடிமக்கள் தங்கள் பெயர்களை ...

புது தில்லி: சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் பிப்.25-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: சாலை விபத்துகளில் பலத்த காயமடைந்தவா்களுக்கு நிவாரணமாக தற்சமயம் ...

கோவை : கோவையில் மக்களிடயே எடுத்த சர்வே மூலம் மக்கள் அதிமுக.,வுக்கு தான் வாக்களித்தனர் என்பது தெரிகிறது என்றும், திமுக முறைகேடாக வெற்றி பெற்றுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் முன்பு உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மேலும், தமிழகம் ...

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடை ஒருதலைப்பட்சமானது என கூறி சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். ...

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாணவி கோவை சூலூரை சேர்ந்தவர் ரஞ்சனி(வயது22). இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ...

கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள மத்வராயபுரம் சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை கூட்டம் நேற்று நடந்தது. இதை தென்னிந்திய திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் நடத்தி வைத்தார். இதில் ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலர் எமர்சன், பொருளாளர் ஆனந்த் ஆசீர், திருமண்டல குழு உறுப்பினர் ஜெபசிங், ஆலய போதக சேகர் குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், ...

கோவை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உபைது ரஹ்மான் தலைமையில் கோயம்புத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- கோவை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள மேயர் கோவையில் பழுதடைந்து கிடக்கும் ரோடுகளை உடனடியாக சீர்படுத்த ...