கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக நிர்வாகத்தின் சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு நகர செயலாளர்களும், தொண்டர்களும், கேக் வெட்டி கொண்டாடினர்

 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பகுதியில்
மேட்டுப்பாளையம் வடக்கு நகர செயலாளர் முகமது யூனஸ்,
தெற்கு நகர செயலாளர், முனுசாமி, ஆகியோர் தலைமையில் விழா
ஏற்பாடு செய்யப்பட்டது
மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் அஷ்ரப் அலி,
மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி பொது மக்களுக்கு, மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு இனிப்பு வகைகளை ,பி.டி, பாபு,
எஸ் என்.சேட், நவீன்,
ஜம்ரூத் பேகம், ஆகியோர் வழங்கினார்கள்

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார் இதையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு
அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.