பாரதியார் பல்கலைக் கழக எம்.ஃபில்., பிஹெச்.டி. தேர்வு மையங்கள் அறிவிப்பு.!!

பாரதியார் பல்கலைக் கழக எம்ஃபில், பிஹெச்.டி. எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்., பிஹெச்.டி. (பகுதி 1), எக்ஸ்டர்னல் பிஹெச்.டி. (பகுதி 1) பட்டத்துக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் மே 29, 31, ஜூன் 2 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இதற்கான தேர்வு மையங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) இரா.விஜயராகவன் தெரிவித்து உள்ளார்.

அதன்படி, பல்கலைக் கழக துறைகளின் அனைத்து பாடப் பிரிவு மாணவர்கள், எக்ஸ்டர்னல் பிஹெச்.டி. மாணவர்களுக்கு பல்கலைக் கழக தேர்வாணையர் அலுவலகத்தில் தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் பதிவு பெற்ற ஆராய்ச்சி நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கு டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் தேர்வு நடக்கிறது. தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொள்ளாச்சி கமலம் கலை, அறிவியல் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தினருக்கு உதகை அரசு கலைக் கல்லூரியிலும் தேர்வு நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தினருக்கு திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியிலும், ஈரோடு மாவட்டத்தினருக்கு ஸ்ரீ வாசவி கல்லூரியிலும், தில்லி ஆளுகைக்கு உள்பட்ட பகுதியினருக்கு புதுதில்லி டி.ஐ.பி.ஏ.எஸ் வளாகத்திலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.