கோவை கவுண்டம்பாளையம் ,ராம் குட்டிலேஅவுட்டை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 38) தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று சிவானந்தா காலனியில் உள்ள ஒரு பேக்கிரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போதுஇருசக்கர வாகனத்தில் வேகமாகவந்த ஒருவர் பைக் ஹாரனை சத்தமாக எழுப்பினாராம்.இதை அருண்குமார் தட்டி கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அருண்குமாரை,கைகளால் மார்பில் முகத்திலும் தாக்கினார் .பின்னர் அவரை கீழே பிடித்து தள்ளினார் இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். .இதுகுறித்து கோவை பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு செய்து பைக் ஓட்டி வந்தவரை கைது செய்தனர் .விசாரணையில் அவர் ரத்தினபுரி, சுப்பாத்தாள் லே-அவுட்டை சேர்ந்த பச்சையப்பன் மகன் சஞ்சய் காந்த் (வயது 24 )என்பது தெரியவந்தது. இவர் சி.சி.டி.வி. கேமரா சர்வீஸ் தொழில் செய்து வந்தார்.இவர் மீது இரு பிரிவுகளை வழக்குபதிவ செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply