பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கும், வங்கி சட்ட திருத்த மசோதா-2021க்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு வங்கி தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது..
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) ஆகியவை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது..
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. வங்கி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும். வங்கி தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய தேதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 26, 27 ஆகிய தேதிகளில், வார இறுதியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், இதையடுத்து 28, 29 தேதிகள் வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.. இதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் மூடப்படும்.
எனினும் இந்த வேலைநிறுத்த நாட்களில் அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை எஸ்பிஐ செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக வங்கியில் பணிகள் ஓரளவுக்கு பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. “சாதாரண மக்களுக்கு சேவைகள் கிடைப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்” என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
Leave a Reply