தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை- பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சுவரில் கண்ணை கவரும் ஓவியங்கள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாறும் குழந்தைகள் புற நோயாளிகள் பிரிவு தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை மாறி வருகிறது. இங்கு நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன சுவர் எங்கும் ஓவியங்கள், தரைதளம் சீரமைப்பு, சிறுவர்களுக்கு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மைய பகுதியில் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கர்ப்பிணிகள் பரிசோதனை மையம் வேறு இடத்தில் மாற்றப்பட்டுள்ளதால் அந்தக் கட்டிடத்தை பராமரிப்பு செய்து தனியார் மருத்துவமனைக்கு இணையாக குழந்தைகள் புற நோயாளிகள் சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது. கட்டிடம் முன்பு பூச்செடிகள் கட்டிடம் முழுவதும் வர்ணம்
பூசப்பட்டு அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது . குழந்தைகள் அமர்வதற்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அமர்வதற்கும் தனியார் மருத்துவமனையில் உள்ளதை போல், இருக்கைகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வண்ணத் தொலைக்காட்சி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன சிகிச்சை அறைகள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா திறந்து வைத்தார். குழந்தைகள் சிகிச்சை மையத்தை குழந்தைகள் சிகிச்சை மருத்துவர் விஜய் திறந்து வைத்தார்.
இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் கண்ணன், மருத்துவர்கள் மனோகரன் சசிகுமார் கார்த்திகேயன் சபரி உள்ளிட்ட மருத்துவர்களும்
செவிலியர் கண்காணிப்பாளர் நிர்மலா உள்ளிட்ட செவிலியர்களும்,
மருத்துவப் பணியாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தனியார் மருத்துவமனைக்கு இணையாக புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்ட புற நோயாளிகள் பிரிவை அங்கு கூடியிருந்த அனைவரும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் கண்டுகளித்தனர். இது சம்பந்தமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது இதேபோன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளையும் அரசு மற்றும் தனியார் சமூக நல அமைப்புகள் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய விரைவில் புதுப்பிக்கப்படும் என்று கூறினார்..