இந்தியா – வங்கதேச எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரரை, வங்கதேச எல்லை பாதுகாவல் படையினர் சிறை பிடித்து இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடகா வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்த வரை இருநாடுகள் இடையேயான உறவு நன்றாக இருந்தது. அதன்பிறகு தற்போது இருநாடுகள் இடையேயான உறவு மோசமாகி உள்ளது.
எல்லையில் தேவையின்றி அவ்வப்போது பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியா – வங்கதேசம் இடையே மொத்தம்4 ஆயிரத்து 96 கிலோமீட்டர் தொலைவுக்கு சர்வதேச எல்லை உள்ளது. நம் நாட்டின் மேற்குவங்கம், திரிபுரா, அசாம், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.எல்லையில் பெரும்பாலான இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சில இடங்களில் தடுப்பு வேலிகள் இல்லாமல் உள்ளது.
மேகலாயா மாநிலம் வங்கதேசத்துடுன் மொத்தம் 443 கிலோமீட்டர் எல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளது. மேகாலயாவின் ஜோவை ஏரியாவில் இருநாடுகளின் எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளது. இந்த இடத்துக்கு எதிர்பகுதியில் வங்கதேசத்தின் சில்ஹெட் மாவட்டம் பிச்சினகண்டி எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடம் இருநாடுகளின் எல்லையில் மிகவும் பிரபலம். அடிக்கடி இருநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா ‘ஹாட்ஸ்பாட்’டாக இது உள்ளது. இந்த எல்லையில் இந்தியா சார்பில் பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று எல்லை தாண்டி வங்கதேசத்துக்குள் நுழைந்ததாக கூறி இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் ரேங்கில் உள்ள வீரர் ஒருவரை வங்கேதச எல்லை பாதுகாவல் வீரர்கள் சிறை பிடித்தனர்.
இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கையில் வாக்கி டாக்கி, INSAS துப்பாக்கி, பம்ப் ஆக்ஷன்துப்பாக்கி உள்ளிட்டவை வைத்துள்ள நிலையில் வங்கதேசத்தின் எல்லை பாதுகாவல் படையை சேர்ந்த வீரர்கள் அவரை கட்டாயப்படுத்தி பைக்கில் ஏற்றி செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது அதன்பிறகு இருநாடுகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. எல்லை பாதுகாப்பு படை வீரரை விடுவிக்கும்படி நம் நாட்டின் சார்பில் வங்கதேசத்திம் கோரப்பட்டது. அதனை ஏற்று நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரரை வங்கதேசம் விடுவித்தது.







