ரஷ்யாவில் தன்னை ஒரு வேற்று கிரகவாசி, மனிதனல்ல என குறிப்பிட்டுள்ள சிறுவன் ஒருவன், மொத்த மனிதகுலத்தையும் காப்பாற்ற வந்தவன் தாம் என அறிவித்துள்ளான்.
ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியை சேர்ந்த Boris Kipriyanovich என்ற சிறுவனே, அணு கதிர்வீச்சில் இருந்து உலகை காப்பாற்ற செவ்வாயில் இருந்து பூமிக்கு வந்தவன் என அறிவித்துள்ளான்.
செவ்வாய் கிரகவாசி எனவும் அங்கு தமக்கு குடியிருப்பு இருப்பதாகவும் கூறியுள்ள சிறுவன் போரிஸ், மனித குலத்தை காப்பாற்ற தம்மை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
அது மட்டுமின்றி, லெமூரியன் காலத்தில் பல ஆண்டுகளாக பூமிக்கு பல முறை விஜயம் செய்ததாகவும் சிறுவன் போரிஸ் தெரிவித்துள்ளான். லெமூரியன் என்பது, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலின் கீழ் இருந்ததாக நம்பப்படும் ஒரு கற்பனையான கண்டம்.
மேலும், தாம் ஒரு விண்வெளிக்கலம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதை இயக்கினால் பிரபஞ்சத்தில் எங்கும் பறக்க முடியும் எனவும் போரிஸ் குறிப்பிட்டுள்ளான்.
இது இவ்வாறிருக்க, போரிஸின் தாயார் கூறுகையில், தமக்கு பிரசவ வலி ஏதும் ஏற்படவில்லை எனவும் மிக விரைவாகவே அனைத்தும் முடிந்தது எனவும், குழந்தை போரிஸை தம்மிடம் ஒப்படைக்கும் போது, பெரியவர்களுக்கான கண்களுடன் தம்மை கூமையாக பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.