அவினாசி ரோடு மேம்பால பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் வழக்கம் போல வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது அண்ணா சிலை அருகே வந்த போது வாலிபர் ஒருவர் மேம்பால தூண்கள் அருகில் இருந்த மின் வயர்களை அறுத்து திருடி கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த ஈஸ்வரன் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தார். உடனே அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர். ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த வாலிபரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply