கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள மங்களக்கரை புதூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் நேற்று பாசஞ்சர் ஆட்டோவில் புங்கம்பாளையம்- குருந்தமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் செந்தில்குமார் இறந்தார். இது குறித்து அவரது மனைவி சுசிலா காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மங்களக் கரைபுதூர் ஆட்டோ டிரைவர் பழனிசாமி (வயது 41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
ஆட்டோ கவிழ்ந்து பயணி பரிதாப பலி..
