எரிஸ் வைரஸ் தொற்று… அச்சுறுத்தல் இல்லை- உலக சுகாதார அமைப்பு தகவல்..!

உலக அளவில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட்-19 வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு இஜி  .5 என்று அழைக்கப்படும் எரிஸ்  வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.

மேலும், கடந்த மே மாதத்தில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்படுகிறது. அதில் ஒருவருக்கு எரிஸ் தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களின் அதன் தாக்கம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா மற்றும் சீனாவில் பரவி வரும் இஜி  .5 வைரஸ் தொற்று விவாகரத்தை “வேரியண்ட் ஆஃப் இன்ட்ரெஸ்ட் அதாவது, குறிப்பிட்ட மரபணு குறிப்பான்கள் கொண்ட மாறுபாடுகள் என்று வகைப்படுத்தியுள்ளது. இது மற்ற வகைகளை விட பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளது.

மேலும், தற்போது உள்ள மற்ற ஓமிக்ரான் மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது இஜி  .5 கூடுதல் பொது சுகாதார அபாயங்களைக் கொண்டுள்ளது என்று தங்களுக்கு கிடைக்கக் கூடிய சான்றுகள் தெரிவிக்கவில்லை. இஜி  .5 ஆல் ஏற்படும் அபாயத்தைப் பற்றி இன்னும் விரிவான மதிப்பீடு தேவை என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வேகமாக பரவும் தொற்று, அமெரிக்காவில் 17% க்கும் அதிகமான நோய் தொற்றுக்களை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

யுகேஹெச்எஸ்ஏவின் துணை இயக்குநர் டாக்டர் மீரா சந்த், ‘எதிர்கால கோவிட்-19 அலைகளுக்கு எதிராக தடுப்பூசி போடுவது நமது சிறந்த தற்காப்பாக உள்ளது, எனவே மக்கள் தங்களுக்குத் தகுதியான அனைத்து அளவுகளையும் விரைவில் எடுத்துக்கொள்வது எப்போதும் முக்கியம்’.

மூக்கு ஒழுகுதல்,தலைவலி,நிலையான சோர்வு,தும்மல்,தொண்டை வலி

இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். அதே வேளையில், பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் வறட்டு இருமல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை புண் மற்றும் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படலாம். மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், பரிசோதனை செய்து கொள்ள  உங்கள் மருத்துவரை அணுகவும்..