சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள ...

கோவை புலியகுளம, அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 46 ) செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள நரிக்கல்பட்டி ஆகும். இவருக்கும் அதே செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு ( வயது 50) ...

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒளிபரப்ப காமாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட எல்இடி திரை அனுமதி பெறாததால் அகற்றப்பட்டதாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.அயோத்தி கோயில் ...

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48) அவரது மகன் சுரேந்திரன் (வயது 19) நேற்று இவர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த அரவிந்தன் ( வயது 30) சுதர்சன் ( வயது 19) குணசேகரன் ( வயது 23 )நாகராஜ் ( வயது 50) ஆகியோருக்கும் இடையே அங்குள்ள ஆட்டோ ...

கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள்லே அவுட் – டை சேர்ந்தவர் பூபதி ( வயது 36) இவரிடம் வடவள்ளி சுண்டபாளையம் சேர்ந்த அன்பு சிவா,பாக்கியலட்சுமி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள் .தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பழக்கம் உண்டு .அவர்கள் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறினார்கள்.இதை நம்பிய ...

கோவை : தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தபடுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கசபா போலீசார் புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிக்காடு பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி சொகுசு ...

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வெளியிட்டார். நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய ...

கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளி – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறை   கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30 ). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் .இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் ...

நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக, பாஜக தீவிரமாக களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் தனித்து களமிறங்கும் முடிவை எடுத்திருப்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் ...