தமிழக குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே என் நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஏப்ரல் மாதம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முன் ...

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை, சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தது. ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பொன்னுசாமி என்பவர் கடந்த 28.12.2013 அன்று பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஆராயி வயது 52 மற்றும் மகள்கள் கவிதா வயது 35, மஞ்சு வயது 33 மற்றும் கௌரி வயது 31 ஆகிய மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் பொன்னுச்சாமியின் உயிரிழப்பைத் ...

கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆவார். காளப்பட்டி பகுதியில் வசிப்பவர் முருகன். இவர்களது இருவரது வீட்டில் என். ஐ. ஏ அதிகாரிகள் இன்றுசோதனை நடத்தினார்கள். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய வாகன சோதனையில் கைதுப்பாக்கி, ...

திருநங்கை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐ.டி. ஊழியர் கைது கோவை வடவள்ளி, மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ...

தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், அதில் ரூ.5 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த திருக்கோயிலில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைப்பெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான ...

பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:இது வெறும் இடைக்கால பட்ஜெட் அல்ல; நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட். இது, வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதமாக உள்ளது. இந்த பட்ஜெட், வளர்ந்த இந்தியாவின் நான்கு துாண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இளம் ...

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தான் கோடை காலம் துவங்குகிறது. ஆனாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பு, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.தினமும் சராசரியாக 15,000 மெகாவாட் என இருந்த மின் நுகர்வு, ஜனவரி 31ம் தேதி 17,129 மெகாவாட்டாக அதிகரித்தது.ஜனவரியில் மின் நுகர்வு 17,000 ...

சென்னை: எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு ‘எந்தமதமும், சாதியும் அற்றவர்’ எனசான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே சிலருக்கு இதுபோல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதால், ...