மாநகராட்சி கூட்டம் நடந்துக்கொண்டிருந்தபோது, மேயர் பிரியாவை நோக்கி முற்றுகையிட அதிமுக கவுன்சிலர் சதீஷ் வந்ததால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று திரண்டனர். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று கூடியது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 22 சட்டமன்ற ...

E20 எத்தனால் கலப்பு பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் காப்பீடு ரத்தாகிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் வதந்தி என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. E20 எரிபொருள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ...

சென்​னை, திருச்​சி, கோவை உள்​ளிட்ட 5 மாவட்டங்களில் சாலை​யோர உணவு விற்​பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார். சென்னை தேனாம்​பேட்​டை​யில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தலை​மை​யில் உணவு பாது​காப்​புத்​துறை அலுவலர்களு​ட​னான ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடந்​தது. கூட்​டம் முடி​வில், அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: அசைவ உணவு விடு​தி​கள், மக்​கள் அதி​கம் ...

நேற்று மாலை தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரபதி பவனில் , அவரது தலைமையில் நாட்டின் மிகவும் உயரிய குடிமை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் தொடர்ச்சியாக இரண்டாவது முறை நடைபெற்றது. இந்த விழாவில் கலைத்துறை , விளையாட்டுத்துறை உள்ளிட்ட ...

எல் நினோ தாக்கத்தால் பருவமழை தாமதமாகி உள்ளதன் காரணமாக இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 315 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று ஒன்றிய அரசும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) எச்சரித்துள்ளன. பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலில் இருக்கும் 12 மாநிலங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகம், ...

தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இதில் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தேர்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின் படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை ...

இந்தியாவின் ‘கேஜிஎஃப்’ எனச் சொல்லப்படும் கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டபின், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திராவில் டன் கணக்கில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதல் முறையாக தனியார் சார்பில் தங்கம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கம் ஆந்திரா மாநிலம், குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணம் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பில் கோயிலின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்டணங்களை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தங்கரத உலா திட்டத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும்,அதற்கு நிரந்தர வைப்பு ...

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய முக்கிய நாடுகள் உள்ளடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் ஆற்றல் துறை அமைச்சர்களின் மாநாட்டை நான்காவது முறையாக தலைமையேற்று நடத்துகிறது இந்தியா.சர்வதேச அளவில் நிலவி வரும் எரிசக்தி தேவைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவே இந்த மெகா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த ...

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாமல் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக தூதரான ஜேமிசன் கிரீர் இன்று இந்தியா வருகிறார். இரு நாட்கள் அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு கட்டமாக வர்த்தக ...