இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்ணிக்கையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பின்னுக்குத்தள்ளி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களின்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும் வீடியோக்களும் லட்சக்கணக்கில் வைரலானது.இதன்மூலம் இளைஞர்களைச் சென்றடைய டிஜிட்டல் ஊடகங்களே மிகச் சிறந்த வழி என்பது மீண்டும் உறுதி ஆகி உள்ளது. இதனால் ஆளும் ...
டாஸ்மாக் பார்கள் விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை கொண்டு வந்தது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே வேளையில் இது பொதுமக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வரும் நிலையில், அரசுக்கு வருமானம் ஈட்டிக்கொடுப்பதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ...
மாநில வருவாயை அதிகரிப்பதற்காக மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மான்டேக் தலைமையிலான குழு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த குழுவானது 3 மாதங்களுக்குள் தமிழ்நாட்டி வருவாயை பெருக்குவதற்கான அறிக்கையை தமிழக அரசிடம் ...
தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பொது கட்டிடங்கள் துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் மாண்புமிகு முதலமைச்சர் ...
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் 9312 ஒன்றான ...
கேரளா லாட்டரிகளை அங்கு சுற்றுலா செல்லும் தமிழர்களும் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். ஒரு சில நேரம் பம்பர் லாட்டரிகளில் முதல் பரிசும் அடித்து விடுகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி டிக்கெட்டுகளை அதிக அளவு வாங்கி செல்லப்படுகிறது. இதனையடுத்து, வாளையாறு எல்லையில் தமிழக போலீசார் தீவிர சோதனையை தொடங்கியுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ...
தமிழகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான நில நிர்வாக ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ள இவரது இந்தப் புதிய நியமனம் மாநிலத்தின் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலிலும் அரசுத்துறைகளிலும் தனது துணிச்சலான நடவடிக்கைகளால் ...
மாணவர்கள் போராட்டம் மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்த தனது கருத்துகள் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். நீதி வேண்டி வரும் ஒவ்வொரு மனிதருக்கும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றும், முறைப்படி தாக்கல் செய்யப்படும் எந்தவொரு மனுவையும் நீதிமன்றம் ...
ஆந்திராவில், கொரோனாவின் தாக்கத்தால், சமீபத்தில் 4 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதில், தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களும் உயிரிழந்ததால், கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள கொரோனா, எந்த வகை என்பதை கண்டறிய, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. ஆய்வு முடிவில், நாடு முழுதும் ...
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோனியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கைப் பணம் திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாகவே கோயில்களில் முறைகேடு நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் உலக புகழ்பெற்ற கோவை கோனியம்மன் கோயிலிலும் உண்டியல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ...













