யாரை வேண்டுமாலும் பிரதமராக தேர்ந்தெடுங்கள். ஆனால், ரிஷி சுனக் வேண்டாம் என்பது போல தனது கருத்தை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார் போரிஸ் ஜான்சன். பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். தனக்கு எதிரான நிலைப்பாடு தனது கட்சிக்குள் எழுந்த காரணத்தால் கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார். ...
டெல்லி: விரைவில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளநிலையில், யாரை வேட்பாளராக நியமிப்பது என்ற குழப்பத்தில் பாஜக சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு திரௌபதி முர்மு என்ற ஒடிசா மாநிலத்தைச் சேந்த பழங்குடியின தலைவரை பாஜக முன்னிறுத்தி உள்ளது. இவரை ...
காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில், “அனைத்து கட்சிகளும் காமராஜரை மறந்து விட்டன. கிண்டியில் ...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி ...
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி, போயர் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை(வயது55). கட்டுமானத் தொழிலாளி. இவர் நேற்று காலை கோத்தகிரிக்கு வேலை தேடி வந்தார்.அங்கு பல இடங்களில் வேலைத் தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து தம்பிதுரை கோத்தகிரியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் மேட்டுப்பாளையம் புறப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பஸ்சை நிறுத்துமாறு ...
கோவை உக்கடம் ஜி. எம். நகர், கோட்டை புதூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 55) இவர் ஐந்து மூக்கு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் உக்கடம் வாலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக கிடந்தார்.இது குறித்து அவரது மனைவி ரபியா ரேஸ்கோர்ஸ் போலீசில் ...
கோவை கவுண்டம்பாளையம் அன்னையப்பர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் விஷ்வா (வயது 21 )பி. எஸ் .சி. பட்டதாரி.படித்து முடித்துவிட்டு கடந்த 2ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருந்தார்.வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது ...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில், நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்கப்பட்டுள்ளது. கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடைபெற்ற இவ்வாகன துவக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநிலத் ...
கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது இருசக்கர வாகனத்தில் பீளமேடு பெரிய ...
கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், முதல் முறையாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு பிடிபடுவோருக்கு ரூ 5 ஆயிரம், இரண்டாவது முறை விற்பனை செய்தால் ரூ.10,000 ...