மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரேயும், அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டேயும் தங்களுக்கு ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவரும் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி மனுக்கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 8-ம் தேதிக்குள் இரண்டு அணிகளும் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்கவேண்டும் என்று ...

திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக காவிரி டெல்டா பகுதி மக்கள் குற்றம்சாட்டி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, 2020ம்ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட ...

அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றன. சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அதிமுக பல அணிகளாக பிரிந்து இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இவர்களை யாருமே பிடிக்காத இவர்களால் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் எம். ஜி. ஆர் ஆதரவாளர்கள் அணி ஒன்றும் உள்ளது. இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘ஒன்றிணைந்த ...

கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அப்போதைய வீட்டு வசதி வாரிய அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் நேற்று முன் தினம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. கடந்த 2006-2011 திமுக ...

சென்னை : சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்த சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல் ...

கோவை செஞ்சிலுவை சங்கத்தின் முன்பாக இன்று பாமக சார்பில் குட்கா, கஞ்சா, மது, சிகரெட் ,ஆகியவற்றை தடை செய்யக் கோரியும், வரும் தலைமுறையை போதைப் பழக்கத்திற்கு ஆளாக வண்ணம், தடை செய்ய வேண்டும் என்று கூறி, பாமக கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக செய்தி ...

கோவை பீளமேடு காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் .இவரது மகன் அர்ஜுன் ( வயது 28 ) பி.இ.எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் கீரணத்தத்தில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார் .கடந்த 27ஆம் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அர்ஜுன் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கோட்டூர் ,இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் பிரதீபன் ( வயது 33) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.அதே முகாமில் வசிப்பவர் பவித்ரா (வயது 27) இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் பிரதிபன் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்தி மேடு, பவானி நகரை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி சகாயமேரி ( வயது 60 )இவர் கடந்த 21 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார் .நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 46) பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 43) இவர்கள் இருவரும் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது பற்றி பள்ளியில் நடந்த ...