கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்- மத்திய அரசு முதற்கட்ட அனுமதி..!

சென்னை: மெரீனா கடற்கரையில் கருணாநிதி நினைவுச்சின்னம் அருகே கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது.

பேனா நினைவுச்சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாகவும் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூன் 20, 2022 அன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அமைந்துள்ள இடத்திற்குப் பிற்பகுதியில் கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா வடிவ சிலை அமைப்பதற்காக CRZ அனுமதிகோரி சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள பேனா நினைவுச் சின்னத்தை நினைவிடத்தில் இருந்து சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ன் படி பகுதி IV(A) என வரையறுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கு கடற்கரை, 360 மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது.

பேனா நினைவுச்சின்னத்தை ஒட்டி புல்வெளிகள் உள்பட கண்ணை கவரும் வகையிலான கலை நயமிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து நடுக்கடலில் அமைக்கப்படும் ‘பேனா’ நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் நிறுவப்படுகிறது.

கடல் அலைகள் எழும்பும் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதை வசதிகளும் செய்யப்பட உள்ளன. இந்த பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறும் பணிகளை பொதுப்பணித் துறை தொடங்கியது. ரூ.81 கோடி மதிப்பில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித் துறை பெற்றுள்ளது.

தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறும் முயற்சியில் பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது. இதன்படி திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை கடிதம் எழுதியது.

இதனையடுத்து பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை அளித்துள்ளது. பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேனா நினைவுச்சின்னம் அமைக்க முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாகவும் பல்வேறு கட்ட அனுமதிகளை பெற வேண்டியுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.