உத்​தர பிரதேசத்​தில் அரசு மானியம் பெறு​வதற்​காக போலி திருமணங்கள் நடை​பெற்​றது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டுள்​ளது. இது​தொடர்​பாக, 194 விண்​ணப்​பங்​கள் ரத்து செய்​யப்​பட்டு விசாரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. உத்​தர பிரதேச அரசு பொருளாதார ரீதி​யாக நலிந்த குடும்பங்களின் மகள்​களின் திரு​மணத்​துக்​காக ரூ.20,000 மானியம் வழங்​கு​கிறது. இதற்​காக, போலி திரு​மணங்​கள், உ.பி.யின் மைன்​புரி மாவட்​டத்​தில் நடை​பெற்​றுள்​ளன. இதில் மணமகள் அல்​லது மணமகன் இல்​லாமல் ...

மணிப்பூரில் 3 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மெய்ரா பைபி பெண்கள் அமைப்பினர் நேற்று இரவு பிரம்மாண்ட தீப்பந்தப் பேரணி நடத்தினர். மணிப்பூரின் சுனுரோக் மலைப்பகுதியில் அக்டோபர் 19-ந் தேதி விறகு சேகரிக்கச் சென்ற மைத்தேயி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் மீது ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ...

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ...

மதுபோதையில் பெண்களை ஆபாசமாகத் திட்டிய ஆம்னி பேருந்து ஊழியர்” – கோவை பட்டேல் சாலையில் நிகழ்ந்த அட்ராசிட்டி: வீடியோ எடுத்த நிருபரின் செல்போன் மற்றும் வாகனம் பறிப்பு! ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்குப் பின் நடந்த கூத்து.காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை! ​ ​ கோவை, வடகோவை, பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஆம்னி ...

மத்திய அரசு வெளியிட்டுள்ள விலை கண்காணிப்பு தரவுகளின்படி, வெங்காயத்தை தொடர்ந்து சர்க்கரையின் விலை சுமார் 22% வரையிலும், சூரியகாந்தி எண்ணெயின் விலை 18% வரையிலும் உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் இந்த விலையேற்றம் காரணமாக, செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் (Retail Inflation) இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.5% ஆக அதிகரித்துள்ளது.உணவு பணவீக்கம் மட்டும் ஆண்டிற்கு ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வெள்ளை மாளிகை புதிய ஊடகச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் கேட்டி ஸக்கரியா.இவர் தனது முதல் உத்தியோகப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுப் பேசியபோது, டொனால்ட் டிரம்ப்-ஐ தனது கணவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்ட சம்பவம் உலக அளவில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர், ...

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​காக நடத்​தப்​பட்ட சிறப்பு டெட் தேர்​வில் 1 லட்​சத்து 10 ஆயிரம் பேர் தோல்வி அடைந்த நிலை​யில், மீண்​டும் சிறப்பு டெட் தேர்வு நடத்​தப்​பட​வுள்​ள​தாக​வும் அதற்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் விரை​வில் வெளி​யிட உள்​ள​தாகவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்​களுக்கு பயிற்​சி​யளிக்​கப்பட உள்​ள​தாகவும் அமைச்​சர் ராஜ்மோகன் அறி​வித்​துள்​ளார். ஒன்​றாம் வகுப்பு ...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான ராஜேந்திரனுக்கு ரூ.10,251 மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து ராஜேந்திரன் புகார் கொடுத்தும், மின் கட்டணத்தை செலுத்தக் கோரியதால், மின் கட்டணம் செலுத்தாததால், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மின்சாரக் ...

தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிக்கத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் சராசரியாக ரூ.35 என்ற அதிக விலைக்கு 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படும் ரூ.1.20 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பைத் தவிர்க்க, பாதியில் முடங்கிக்கிடக்கும் அனல்மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, அதற்கான ...

மக்கள் வரிப்பணத்தை வைத்து அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என்று நீதிமன்றம் அரசுக்குத் தடை விதித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அடுத்த மாதம் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஆளும் குடியரசு கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு விதமான பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ...