கோவை: திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிமுக சார்பில் கோவையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. இந்நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ...

கஞ்சா போதையில் கத்தியால் குத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவையில் வெளியாகி பரபரப்பு கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் இருவர் கைது. சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை சுங்கம் பகுதியில் போதையில் இருந்த தந்தை மகன் ஆகியோர் எதிர்தரப்பினரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி ...

கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும் என முதல்வர் பேச்சு. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும். ...

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைப்பெற்றது . மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் நேற்று  நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க ...

மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக புதிய மின் இணைப்பு பெறுபவர்கள் ‘ரெசிடுயல் கரென்ட் டிவைஸ்’ என்ற கருவியை பொறுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் மின் பழுது மற்றும் மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு ...

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் ஆதித்யாஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள் ஊற வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த விழாவில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊற வைக்கப் பட்டன. இந்த ஊறல் கிறிஸ்துமஸ் ...

கோவை அடுத்த அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி குருக்கம்பாளையம் பகுதியில் 31 வயது நபருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. உடனே அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதேபோன்று கஞ்சப்பள்ளி சர்ச் தெருவை சேர்ந்த ஐந்து ...

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல் அமர்நாத் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்டர். இவர்களது மகன் பென்னிஸ்குமார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ...

கோவை வடவள்ளியில் உள்ள மருதம் நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 45 ) இவர் பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி(வயது 40).சம்பவத்தன்று காலையில பெரியசாமி கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் நுழைந்து 2 மர்ம ஆசாமிகள் மகேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் ...

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் முருகேசன்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் ஆவார். இவரது மகன் சுதாகர் ( 38 ) சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று அவிநாசி- கருமத்தம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அங்குள்ள காடுவெட்டி பாளையம் நால்ரோடு அருகே சென்றபோது திடீரென்று ...