சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் – இன்று தொடங்கியது..!!

சென்னை-மைசூரு செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.

சென்னையிலிருந்து மைசூரு வரை செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் வெள்ளிக்கிழமை(நவ-11) அன்று தொடங்கவிருக்கிறது, இதனை முன்னிட்டு சோதனை ஓட்டமாக இன்று காலை சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. தென் இந்தியாவிலிருந்து செல்லும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சராசரி வேகம் மணிக்கு (75-77)கி.மீ வரை செல்லும், மற்றும் மொத்த தூரமான 504 கி.மீ தொலைவை 6மணிநேரம் 30நிமிடத்தில் கடக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது.