கோவை :சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மகன் சபரிவாசன் (வயது24) இவர் சின்ன தடாகத்தில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள மாடியில் தங்கி இருந்தார் .அவர் தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை ,கிருஷ்ணாலே – அவுட்டை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜெயமுருகன் ( வயது 35) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா), பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் முரளி நேற்று அங்கு திடீர் சோதனை ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்கோபால் இவரது மகன் வரதயகிரிவு ராம் (வயது 22) பி.டெக் பட்டதாரி.இவர் சாப்ட்வேர் என்ஜினியரிங் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.இந்த நிலையில் நேற்று அவர் தனது பெறோரிடம் தலைவலிப்பதால் ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 30). ராணுவ வீரர். இவருக்கு டெலிகிராம் எனும் செயலி மூலம் ஆமதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆனார். அவர், தான் பங்கு சந்தை வர்த்தகம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை ...
கோவை எட்டிமடையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது: பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் இருந்த பல்வேறு பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதால் நாடு பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி அடைந்து வருகிறது. மொழி, இடம், கலாசாரம் ...
கோவை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட புகையிலைத் தடுப்புப் பிரிவின்கீழ் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பறிமுதல், அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ...
கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், ...
கோவையில் இருந்து மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை 2023-ம் ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை – ஜபல்பூா் இடையே கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் வாரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் வரை ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரெயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு போலீஸ் துறை ஹமில்டன் கிளப் அமைந்துள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், (திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும்) ...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை ...