கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். மகள் தொழிலாளியின் பராமரிப்பில் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் ...

கோவை: மதுரை, கண்ணூா், ஷொரனூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரெயில்கள் நாளை ( 20-ந் தேதி) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என ரெயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரெயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மதுரை, கண்ணூா், சொரனூரில் இருந்து ...

கோவை: தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்து உள்ளது. இதனை மீறி சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் ...

புதுச்சேரி மாநிலத்தில் முதல்முறையாக தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது மத்திய பிரதேசத்தில் இந்தி வழி மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவர முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தப்படும் இதற்காக குழு அமைக்கப்படும் தமிழ் ...

கோவை தொண்டாமுத்தூர்- போளுவாம்பட்டி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பைசூல் இஸ்லாம் (வயது 21) கைது ...

கோவை மாநகரில் ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் என பல்வேறு கல்லூரிகள் இயங்கி வருகிறது. இங்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியான என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ...

கோவை: இந்தியாவில் செயல்படும் பிரபல செல்போன் நிறுவனங்கள் தங்களது செல்போன் டவர்களை தனியார் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் மாத வாடகை அடிப்படையில் அமைத்துள்ளனர். இதேபோல், சென்னையை சேர்ந்த தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் செல்போன் டவர்கள் கோவையில் பல இடங்களில் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு செல்போன் நிறுவனம் தனது செல்போன் ...

கோவை: திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இந்தியாஸ். இவரது மகன் முகமத் அப்துல் ரகுமான் (வயது18). இவர் கோவை பீளமேட்டில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அறையில் இருந்த அவரது லேப்டாப், 2 செல்போன்கள் காணாமல் போனது. அதிகாலை அவரது அறைக்குள் நைசாக புகுந்த ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டியை சேர்ந்தவர் மணிமேகலை.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் மணிமேகலை மீண்டும் கர்ப்பமானார்.இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர்.ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது மணிமேகலைக்கு அதிக பிரசவலி ஏற்பட்டது.இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் வேனை  ரோட்டில் ஓரமாக நிறுத்தினார்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ...

கோவை கவுண்டம்பாளையம் ,ராம் குட்டிலேஅவுட்டை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 38) தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று சிவானந்தா காலனியில் உள்ள ஒரு பேக்கிரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போதுஇருசக்கர வாகனத்தில் வேகமாகவந்த ஒருவர் பைக் ஹாரனை சத்தமாக எழுப்பினாராம்.இதை அருண்குமார் தட்டி கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அருண்குமாரை,கைகளால் ...