தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கவர்னர் மாளிகையில் நாளை 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.     இந்நிலையில், ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் ...

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் சார்பில் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்ததால், அந்த நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டன் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் முதன்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, ‘விர்ஜின் ஆர்பிட்’ நிறுவனம் சார்பில் ...

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ...

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்சினை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடன் ஆளுநர் ...

தேவராஜன் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் வாரிசு துணிவு படங்களுக்கான சிறப்பு காட்சிகள் காலை நான்கு மணி, ஐந்து மணிக்கு திரையிடப்படுகின்றது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் ...

டெல்லி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என பொதுக்குழு தொடர்பாக வழக்கில் இ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல் பொதுக்குழு எடுத்த முடிவுகளை குறித்து மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. ...

கோவை: “பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டை, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ...

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.மேலும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கூட இந்த கோதுமை மாவு விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ...

கோவை நகரில் கடந்த ஆண்டில் ( 20 22) சிறார் பாலியல் பலாத்காரப் பிரிவில் 44 வழக்குகள் பதிவாகின. இதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர் .போக்சோ இதர பிரிவில் 31 வழக்குகள் பதிவானது மொத்தமாக 85 வழக்குகள் பதிவாகின. பெண்களிடம் பாலியல் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 20 21 ஆம் ...

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் பீமாபாண்டியன் (வயது 38) இவர் இந்து மக்கள் புரட்சி படை நிறுவன தலைவராக உள்ளார். இவருக்கும் ரத்தினபுரி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த மெக்கானிக் மனோஜ் (வயது 42) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மனோஜ், பீமாபாண்டியனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ...