ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அவரது சார்பாக அவரது கருத்தினை தெரிவிக்க சொன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து நேற்று  நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து ...

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இன்று காலை முதலே முன்னிலை வகித்துவந்த, தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் ...

சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டபேரவைக்குள் நுழைகிறார் ஈவிகேஎஸ். இளங்கோவன். அவர் கடந்து வந்த அரசியல் பாதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தை விட்டு விலகி திமுகவை தொடங்கியபோது ஈவிகே சம்பத் அவருடன் இணைந்து பயணித்தார். பின்னர் ஈவிகே.சம்பத் காங்கிரசில் சேர்ந்தார். தந்தையுடன், இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில் இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ...

நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் இம்முறை ஹெகானி ஜக்லு, சல்ஹாட்டோ க்ரூஸ், ஹூகளி சீமா, ரோசி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் என்டிபிபி சார்பில் திமாபூர்-3 தொகுதியில் போட்டியிட்ட ஹெகானி ஜக்லு, அங்காமி தொகுதியில் போட்டியிட்ட சல்ஹாட்டோ க்ரூஸ் வெற்றி பெற்றனர். இதன் மூலம் நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளன. இதுதவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை ...

ஆந்திராவில் பெற்றோர்கள் பேச்சை கேட்டு 11 ஆண்டுகள் மனைவியை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்த வக்கீலின் கோர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து ...

புதுடெல்லி: திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) முன்னிலை வகிக்கிறது. திரிபுரா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்த கட்சி திரிபுரா மக்கள் முன்னணி(IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ...

அண்ணா பல்கலைகழகம் சார்பில் நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி அண்ணா பல்கலைகழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சில ...

கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் ...