குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ...

திருநெல்வேலியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர், பல்பீர் சிங். இவர் சார்பு ஆய்வாளராகப் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபடும் ...

சிறை தலைமையகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள காணொளி திரை வசதி கொண்ட இந்த மையம் இன்று (28.03.2023) செயல்படத் தொடங்கியது. ரூ.49.5 லட்சம் செலவில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது சிறை பாதுகாப்பை மேம்படுத்தவும், சிறைக்குள் சிறைவாசிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், சிறை ஊழியர்களின் பணியை கண்காணிக்கவும், ...

ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா.பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி நொய்யல் கரையோரம் உள்ள சாயபப்ட்டரை வீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம். ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா செய்த்வதால் பரபரப்பு. போலீஸ் குவிப்பு ஆக்கிர ...

கோவையில் கடந்த மாதம் அடுத்து அடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்றன. இதில் கொலை செய்யப்பட்ட இருவரும் ரவுடிகள் என்பதுடன் அவர்களை மற்றொரு ரவுடி கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் உள்ள ...

கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் ...

கோவை, சித்தாபுதூர் ஜவகர் நகர், புதியவர்நகர் ஆகிய இடங்களில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலும் சாலையோரங்களில் நிறுத்திவிட்டு இரவில் தூங்க செல்கின்றனர். சில வாரங்களாக நள்ளிரவு நேரத்தில் இந்த பகுதியில் வரும் மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோலை பாட்டிலில் திருடி செல்கின்றனர். புதியவர் ...

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ...

ஓசூர் : இந்தியாவில் சிலிக்கான் வேலி என்ற புனைப்பெயருடன் ஐடி துறையில் பெங்களூர் முன்னிலையில் உள்ளது இந்நிலையில் தான் பெங்களூருவுக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ‘டிஎன் டெக் சிட்டி’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 500 ஏக்கரில் உலகத்தரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டெக் சிட்டி அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் துவங்கப்பட ...

சாத்தான்குளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டதை விட கொடூரமாக தாக்கி சிறுவன் கோகுல் ஶ்ரீ அடித்துக்கொலை செய்துள்ளனர் என மக்கள் கண்காணிப்பாகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார். சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், அவரது தாயை கடத்திச் சென்று சித்தரவதை ...