2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: 2023 – 24ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (மார்ச்.20) தாக்கல் செய்யப்படவுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மூன்றாவது ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணையின் மேல்  பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  ரீடு நிறுவனமானது கடந்த 21 ஆண்டுகளாக  குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் அரசுடன் இணைந்து பணி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக    ரீடு நிறுவனம் எக்விடாஸ்  வங்கியுடன் இணைந்து சத்தியமங்கலம் ஆணைக்கொம்பு மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம்முகாமில் ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு: சான்றிதழ்களை காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி ஐ.பி.எஸ் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். முத்துசாமி ஐ.பி.எஸ்., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ...

மது அருந்து விட்டு ஏற்பட்ட தகராறு: வாலிபரை குத்தி கொலை செய்த நபர் கைது  கோவை, வெள்ளலூர் கக்கன் வீதியைக் சேர்ந்த கோபிநாத். மனைவி ஜோதி , மகன் ராஜேஷ்குமார் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் கோபுநாத். அதே பகுதி பெட்ரோல் பங்கில் பணி புரியும் முல்லை நகரை சேர்ந்த ...

இலங்கை தாதா அங்கோட லொக்கா இறந்த வழக்கு விசாரணை முடிந்தது இலங்கை தாதா அங்கோட லொக்கா மாரடைப்பால் தான் இறந்தார் என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அங்கோட லொக்கா என்ற இலங்கை தாதா மீது இலங்கை கொழும்பு நகரில் 8 – க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் ...

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் குனியமுத்தூர் ...

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக உள்ள சித்ரா(48) என்பவர் பணிக்கு வரும்போது தனியார் வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை ...

கோவை: சூலூர் அருகே கருமத்தம்பட்டி, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டு அருகே சிறுத்தை செல்வது போன்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த சி.சி.டி.வி காட்சியில் இன்று அதிகாலை 18.03.2023 தேதி பதிவாகி உள்ளது. மேலும் அதில் பேசுகின்ற பெண் பதுங்கி, பதுங்கி பூனை போன்று பார்த்து ...

அதிமுக உடனான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருப்பதாக கசியும் தகவல், கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் ...