கோவை: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வேப்பங்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது70). இவர் போக்சோ வழக்கில் திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை மீட்டு ...

கோவையில் இன்று ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன் படி, 2022-2023-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பானது, நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பு பணி ...

கோவையில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு சம்பவம் சங்கிலி தொடராக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதேபோல நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதிபுரம், திருமலை .நாயக்கன்பாளையம் ஜனனி கார்டனை சேர்ந்தவர் அரவிந்த் குமார் அவரது மனைவி ஷோபனா ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் விபத்துக்களை தடுக்க முடியும். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போலீசார் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்தி ...

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் தனசேகர்(36). நாட்டு சர்க்கரை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்த வியாபாரி ஜெய்லாபுதீன்(42) என்பவர் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனசேகரை தொடர்பு கொண்ட ஜெய்லாபுதீன் நாட்டு சர்க்கரையை அனுப்பி வைக்குமாறும், சரக்கு வந்தவுடன் ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கினை தற்போது ...

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மோரனாவில் 2 விமானங்களும் விபத்துக்குள்ளாகியுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் ...

கோவை விமான நிலையத்தில் தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு தினமும் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ...

தொழில் போட்டி: அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட தனியார் பேருந்துகள் – அதிர்ச்சியில் கோவை பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக பேருந்துகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் ...