கோவை உள்ள அனைத்து கல் குவாரிகளிலும் அதிரடி ஆய்வு.!!

மதுக்கரை: நெல்லையில் உள்ள ஒரு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதுபோல் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்காத வகையில் கனிம வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கோவை மாவட்ட கனிமவள துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் கனிம வளத்துறை அதிகாரிகள் மதுக்கரை வட்டாரத்தில் பாலத்துறை, நாச்சிப்பாளையம், வழுக்குப்பாறை, மீனாட்சிபுரம், கணவநாயக்கனூர், திருமலையம்பாளையம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் அரசம்பாளையம், காரச்சேரி, பணப்பட்டி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோவிந்தநாயக்கனுர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு நேரில் சென்று உரிமம் இருக்கிறதா? அரசு விதிகளை பின்பற்றி உடைக்கிறார்களா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.