திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மாலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது .அப்போது மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், வேதியல் ஆசிரியருமான மாணிக்கம் அங்கு வந்து தட்டி கேட்டார். அப்போது அந்த மர்ம நபர்கள் அவரை சரமாரி தாக்கினார்கள் .இது குறித்த அவர் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் 2 சிறுவர்கள் மற்றும் மாதேஸ்வரன் நகரை சேர்ந்த தனபால் ( வயது 20 ) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகிறார்கள். பள்ளியில் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் தாக்குதல் – 3 பேர் கைது..!
