கோவையில் காதலர் தினத்தை அத்துமீறி கொண்டாடுபவர்கள், எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களால் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க மாநகரில் முக்கிய இடங்கள் மற்றும் பூங்காக்களிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கோவை வ.உ.சி பூங்காவில் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர் .அனுமதியின்றி கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாட முயன்றதால் போலீசார் அங்கிருந்த 20 பேரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . பின்னர் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் வ உ சி பூங்கா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வஉசி பூங்காவில் கேக் வெட்டி காதலர் தினம் கொண்டாட முயன்ற 20 பேர் கைது..!
