கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, போஸ்டல் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன் .இவரது மனைவி லட்சுமி ( வயது 66) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் வாகனத்தை நிறுத்தி மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல அருகில் சென்றார். கண் இமைக்கு நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 6 பவன் செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மூதாட்டி லட்சுமி துடியலூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.
முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு
