அடேங்கப்பா!! குன்றத்தூரில் 1500 கிலோ தங்க கட்டிகள் மினி லாரியில் பறிமுதல் – மொத்தமாக அள்ளிய பறக்கும் படை.!!

குன்றத்தூரில் பறக்கும் மேம்பாலம் கீழே ஸ்ரீ பெருமந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீ பெருமந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு லாரியும் மினி லாரியும் வந்து நின்றது. அந்த லாரியில் பிரிங்ஸ் என்ற பெயரிடப்பட்ட லாரியில் இருந்து ஊழியர்கள் திபு திபு வென இறங்கினர். அந்த லாரியை ஸ்ரீ பெருமந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் சோதனை போடுங்கள் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். சோதனையில் ஒரு லாரியில் ஆயிரம் கிலோ தங்கமும் மற்றொரு மினி லாரியில் 500 கிலோ தங்கமும் இருந்ததை கண்டுபிடித்தனர் .

ஊழியர்களிடம் துருவித் துருவி விசாரிக்கையில் இந்த லாரி மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது . அதற்கான எந்தவித ஆவணங்களும் கிடையாது என மழுப்பலாக பதில் அளித்தனர். பன்னாட்டு விமான நிலையத்தில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளை எப்படி வெளியே விட்டனர் என வருவாய் கோட்ட அலுவலர் சரவணன் கிடுக்கி பிடியாக சரமாரியாக கேள்விகளை கேட்டார். ஊழியர்களோ இந்த தங்கம் ஸ்ரீ பெருமந்தூர் அடுத்த மண்ணூர் தங்க குடோனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது . விசாரணையில் முடிவில் இந்த தங்க கட்டிகள் யாருக்கு செல்கிறது என கேட்டு தெரிந்து கொண்டால் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவீர்கள் என பதில் கூறினர் . எந்தவித ஆவணங்களும் இல்லாமல் விமான நிலையத்தில் உள்ள கருப்பு ஆடுகள் வெளியே விட்டரா  என துருவித் துருவி விசாரித்து வருகின்றனர் இதுகுறித்து வருமான வரித்துறையினரும் சுங்கத்துறையினரும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாம் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கேட்டபோது நீங்கள் எது கேட்பதாக இருந்தாலும் ஸ்ரீ பெருமந்தூர் ஆர்டிஓ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் பதில் அளித்தார்.  இதுகுறித்து ஸ்ரீ பெருமந்தூர் ஆர்டிஓ சரவணன் இடம் கேட்டபோது நாங்கள் எந்த விபரமும் கூற முடியாது சுங்கத்துறையினரும் வருமான வரித்துறையினரும் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்ன முடித்துக் கொண்டார். 1500 கிலோ தங்கம் ரூபாய் ஆயிரத்து 500 கோடி மதிப்புடையது. யாருக்கு சொந்தமானது விமான நிலையத்திலிருந்து எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வெளியே எப்படி வந்தது என்ற பதில் தெரிந்தால்தான் தமிழக மக்களுக்கு விடை கிடைக்கும்..