கோவை: பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆசிப் ரகுமான் (வயது 20). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தனது வகுப்பில் படித்து வரும் மாணவி ஒரு வரை கடந்த 4 ஆண்டுகளாக காலித்து வந்தார். மாணவியும் அவரை தீவிரமாக காதலித்தார். இந்த நிலையில் ஆசிப் ரகுமானுக்கும், மாணவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை நினைத்து ஆசிப் ரகுமான் மனவேதனையுடன் இருந்து வந்தார். வீட்டில் இருந்த ஆசிப் ரகுமான் தனது காதலியை நினைத்து விரக்தி அடைந்தார்.
அப்போது அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆசிப் ரகுமானின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆசிப் ரகுமானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply