அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்- பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு..!

அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்தது.நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்,அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,தன்னை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும்,இபிஎஸ் ,கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபடுவதாக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.