இரட்டைக் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி திடீர் சாவு..

கோவை ஆலந்துறை அருகே உள்ள விராலியூர், இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32) இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவருக்கு நேற்று திடீர் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார் .இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.