கால்பந்து விளையாடும்போது மைதானத்தில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சோகம்..

கோவை : கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைதிரியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் முகம்மத் ரசித் (வயது 24) இவர் கணபதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் . இவர் வழக்கம் போல தினமும் மாலையில் கல்லூரி மைதானத்தில் தனது நண்பருடன் கால்பந்து விளையாடுவார். அதேபோல நேற்றும் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவர் எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்து விட்டார் .மாரடைப்பு காரணமாக இவர் இருந்திருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து அவரது நண்பர் அப்துல் ரகுமான் (வயது 20) சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்