கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 49) இவர் அங்கு பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பங்கில் ஆனைமலை அங்கலகுறிச்சி பக்கம் ஜே. ஜே .நகரை சேர்ந்த சதீஷ் ( வயது 20 )என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் பங்கில் இருந்த ரூ 34 ஆயிரத்தை திருடிவிட்டு திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து மோகன்ராஜ் கோட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியர் சதீஷ் (வயது 20 )என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply