பைக்கில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி..

கோவை மசக்காளிபாளையம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் விஜய்(27). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பைக்கில் சேரன்மாநகர் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் நிலைதடுமாறி விஜய் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.