அம்மன்குளத்தில் கோஷ்டி மோதல்: 3 பேர் காயம் – 4 பேர் மீது வழக்குப் பதிவு ..!

கோவை புலியகுளம் பக்கம் உள்ள அம்மன்குளம் . நியூ அவுசிங் யூனிட்டில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு கோஷ்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலில் ஒரு கோஷ்டியை சேர்ந்த வினோத் (வயது 25) அவரது தம்பி விவேக்( வயது 21)ஆகியோர் காயமடைந்தனர் .மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஜீவா மகன் விவேக் (வயது 25)காயமடைந்தார்.இது தொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் நாதன் உட்பட 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விவேக் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ் ,இளங்கோவன், விவேக் ஆகியோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.