வாகன போக்குவரத்து நிறைந்த ஊட்டி  சாலையை கடந்த பாகுபலி யானை…

வாகன போக்குவரத்து நிறைந்த ஊட்டி  சாலையை கடந்த பாகுபலி யானை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக மக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை,நெல்லித்துறை,லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை.

இந்த நிலையில் வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த ஊட்டி சாலைக்கு நேற்றிரவு வந்த பாகுபலி யானை சாலையை கடந்து மறுபுறம் சென்று விட்டது.பின்னர்,வாகன போக்குவரத்து அதிகமிருந்ததால் தனது வழித்தடத்தை நோக்கி எவரையும் எவ்வித தொந்தரவும் செய்யாமல் அங்கிருந்த ஒரு தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்தது.

 

இதனையடுத்து ஜாலியாக அத்தோட்டத்தின் மற்றொரு பாதை வழியாக அடர் வனப்பகுதிக்குள் சென்றது.

ஆனால்,மனிதர்கள் தான் வனவிலங்குகளை தொந்தரவு செய்கிறார்களே தவிர பாகுபலி எவரையும் எவ்வித தொந்தரவும் செய்யாமல் தனது வழித்தடத்தை நோக்கி சென்றது.

இதனால் வாகன ஓட்டிகள் சற்றுநேரம் அச்சத்தால் நிற்காமல் ஹாரன்களை அடித்துக்கொண்டே இருந்தது வன ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.