மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை ரத்தினபுரி, டாட்டா பாத், டாக்டர். அழகப்பா ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 72 )இவர் கடந்த 30 ஆண்டுகளாக தள்ளு வண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் கடந்த 6 மாதமாக இவர் வியாபாரத்துக்கு செல்வதில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டாராம், அவர் கொடுக்க மறுத்ததால் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்தும் மனைவி திலகம் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.