கார், ஆப்பிள் போன் கேட்டு மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த கணவர் குடும்பத்தார் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 34) இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஜயலட்சுமி பெற்றோர்கள் 50 பவுன் நகையும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்களும் சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு ரூ 4 லட்சம் செலவு செய்தனர்.இந்த நிலையில் கணவர் முத்துராஜா, மாமனார் செல்வராஜ் , மாமியார் கோமதி ஆகியோர் சேர்ந்து விஜயலட்சுமியிடம் காரும்,ஒரு ஆப்பிள் போனும் வாங்கி வருமாறு கூறி டார்ச்சர் செய்தார்களாம்.இதனால் விஜயலட்சுமி அவர்களது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் முத்துராஜா மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விஜயலட்சுமி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி இது தொடர்பாக விசாரணை நடத்தி விஜயலட்சுமியின் கணவர் முத்துராஜா, மாமனார் செல்வராஜ், மாமியார் கோமதி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி உட்பட 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.