ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி 100 பவுன் நகை, ரூ 10 லட்சம் பணம் கேட்ட வாலிபர் மீது இளம்பெண் பரபரப்பு புகார் ..!

கோவை: சென்னை, ஆவடியை ரோட்டை சேர்ந்தவர் செண்பக பிரியா ( வயது 28) இவருக்கும் கோவை, பட்டணம் ,ரூபி அவென்யூவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் லோகேஷ் ( வயது 28) என்பவருக்கும் 3 -4-. 20 22 அன்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. -3 – 6 – 2022அன்று திருமணம் நடப்பதாக இருந்தது.இந்த நிலையில் லோகேஷ் தனது மனைவியிடம் 100 பவுன் நகையும் ரூ10 லட்சம் ரொக்கமும் வாங்கி வருமாறு கூறினாராம்.அதற்கு அவள் மறுத்தார். இந்த நிலையில் 5 – 4 — 2022 அன்று சினேக பிரியாவும் ,லோகேஷும் சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கினார்கள். அப்போது லோகேஷ் சினேக பிரியாவை ஆபாசமாக படம் எடுத்தாராம். வரதட்சணை கொடுக்காவிட்டால் அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினாராம்.இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா இது தொடர்பாக விசாரணை நடத்தி லோகேஷ் (வயது 28) தாயார் கோகிலவாணி ( வயது 54 )ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.